‘ஹவுஸ் ஓனர்’, ‘ஒத்த செருப்பு’க்கு கிடைத்த கௌரவம்!

கோவாவில் நடைபெறவிருக்கும் 50-வது சர்வதேசத் திரைப்பட விழாவில்   ‘ஹவுஸ் ஓனர்’, ‘ஒத்த செருப்பு சைஸ்-7’ திரையிட தேர்வாகியுள்ளது!

செய்திகள் 9-Oct-2019 2:03 PM IST Top 10 கருத்துக்கள்

மத்திய அரசு சார்பில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழா கடந்த சில ஆண்டுகளாக கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த வருடத்திற்கான 50-ஆவது சர்வதேசத் திரைப்பட விழா அடுத்த மாதம் (நவம்பர்) 20-ஆம் தேதி கோவாவில் துவங்கி 28-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் உருவான 26 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கிறது. அதில் பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ்-7’, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய இரண்டு தமிழ் படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது.

‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருப்பதை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் மகிழ்ச்சியாக கருத்து தெரிவித்திருப்பதில், ‘‘இது முற்றிலும் நான் எதிர்பாராத ஒன்று! மிகுந்த ஆச்சர்த்தையும் சந்தோஷத்தையும் ஒருங்கே அளித்திருக்கிறது. எனது திரைப்படத்தின் மீதான காதலையும், அதன் மீதான என் ஆர்வத்தையும் இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கத்தை தந்து மேலும் மேலும் சினிமாவில் பயணிக்கும் தெம்பை தந்திருக்கிறது. சர்வதேசத் திரைப்பட விழா குழுவினருக்கு எனது நன்றிகள்’’ என்று குறிப்பிட்டிருப்பதுடன் இந்த விழாவில் திரையிட தேர்வாகியுள்ள மற்ற இந்திய படங்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதைப் போல ‘ஒத்த செருப்பு சைஸ்-7’ திரைப்படம் தேர்வாகியிருப்பதற்கு பார்த்திபனும் நன்றிகளை தெவித்துள்ளார்.

#Parthiban #OthaSeruppuSize7 #Vasanthabalan #Jail #SanthoshNarayanan #HouseOwner
#LakshmyRamakrishnan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;