எஸ்.ஜே.சூர்யா படத்தில் இணைந்த சாந்தினி தமிழரசன்!

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தில் சாந்தினி தமிழரசனும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்!

செய்திகள் 15-Oct-2019 11:13 AM IST VRC கருத்துக்கள்

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. ‘ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.ஜே.சூர்யா தயாரிக்கும் இந்த படத்தில் இப்போது இன்னொரு நாயகியாக சாந்தினி தமிழரசன் இணைந்துள்ளார். ராதா மோகனும் எச்.ஜே.சூர்யாவும் முதன் முதலாக இணைந்துள்ள இந்த படத்தில் இணைந்துள்ள சாந்தினி தமிழர்சன், பாலாஜி சக்தி வேல் இயக்கத்திலும் இப்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘மான்ஸ்டர்’ படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவும், பிரியா பவானி சங்கரும் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை கதிர் கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். 2020 ஃபிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ள இப்படம் முற்றிலும் புதிய பாணியில் காதல் கதையாக உருவாகி வருகிறது.

#SJSuryah #AngelStudiosMHLLP #YuvanShankarRaja #RadhaMohan #RichardMNathan #Kadhirr #PriyaBhavaniShankar #SJSuryahFilmFromFebruary14th2020 #ChandiniTamilarasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;