பிகில் – விமர்சனம்

நேரத்தை குறைத்திருந்தால் விளையாட்டு இன்னும்  சுவாரஸ்மாக இருந்திருகும்!

விமர்சனம் 26-Oct-2019 12:04 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Atlee

Production: AGS Entertainment

Cast: Vijay, Nayanthara, Yogi Babu, Vivek, Jackie Shroff,

Daniel Balaji, Indhuja, Reba Monica John & Varsha Bollamma

Music: A. R. Rahman

Cinematography: G. K. Vishnu

Editor: Ruben

‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள ‘பிகில்’ இவர்களுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றிப் படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

ராயபுரத்தையே தன் கண்டோரில் வைத்திருக்கும் பெரிய ரௌடியான ராயப்பனின் (விஜய்) மகன் பிகில் (விஜய்) கால்பந்தாட்டத்தில் மிகவும் திறமையான வீரர்! ஒரு பிரச்சனை காரணமாக கால்பந்தாட்ட விளையாட்டிலிருந்து விலகி இருக்கும் பிகில், ஒரு சந்தர்பத்தில் பெண்கள் ஃபுட்பால் அணியின் பயிற்சியாளராக வேண்டிய கட்டாயம் வருகிறது. பிகில் ஒரு பெரிய ரௌடியின் மகன் என்பதால் அதன் மூலம் அவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது. அதையெல்லாம் பிகில் எப்படி எதிர்கொண்டு பெண்கள் கல்பாந்தாட்ட அணியை எப்படி இந்திய அளவிலான போட்டியில் விளையாட வைத்து கோப்பையை வென்று வர வைக்கிறார் என்பதே ‘பிகில்’ படத்தின் கதை!

படம் பற்றிய அலசல்

சமீபகாலத்தில் வெளியான ஸ்போர்ட்ஸ் படங்களில் இருந்து இது ‘பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்’ என்ற ஒரு வித்தியாசமே உள்ளது. அதையும் சுவாரஸ்யமான திரைக்கதையாக தருவதில் இயக்குனர் அட்லி கோட்டை விட்டுள்ளார். மாநில அளவிலிருந்து தேசிய அளவில் விளையாட போகும்போது அந்த அணியினரை விளையாட விடாமல் தடுக்கும் அரசியல், அதிலுள்ள பிசினஸ் விஷயங்கள், அதனால் வரும் பிரச்சனைகள், இவையை எல்லாம் எதிர்கொண்டு அந்த அணி ஜெயித்து கப்பை வெல்லுவது என்ற வழக்கமான ஃபார்முலா கதைதான் இந்த பிகிலும்.

அப்பா ராயப்பன், மகன் பிகில் என்று விஜய் ஏற்று நடித்த இரண்டு கேரக்டர்களுடன் ராயப்பனை தீர்த்துக்கட்ட முயற்சிக்கும் இன்னொரு ரௌடியான ஐ.எம்.விஜயன், அவரது மகன் டேனியல் பாலாஜி, கால்பாந்தாட்ட அணியின் ‘கோச்’சாக வரும் கதிர், மானேஜராக வரும் விவேக், பிகில் கூட வரும் ஆனந்த்ராஜ் என்று படத்தில் ஏகபட்ட கேரக்டர்கள். ராயப்பன், பிகில், பிகிலின் காதலியாக வரும் நயன்தாரா, கால்பந்தாட்ட விளையாட்டு துறையின் தலைவராக வந்து பிகிலுகு டஃப் கொடுக்கும் வில்லனாக வரும் ஜாக்கி ஷெராஃப், கால்பந்தாட்ட வீராங்கனைகளாக வரும் இந்துஜா, வர்ஷா, ரெபா மோனிகா ஜான், இந்திரஜா சங்கர் தவிர்த்து படத்தில் மற்ற கேரக்டர்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, அந்த கேரக்டர்கள் கதையுடன் ஒட்டவும் இல்லை. கால்பந்தாட்டத்தில் பெரும் நாட்டம் கொண்ட அந்த வீராங்கனைகளுக்கு பிரபல ஃபுட்பால் ப்ளேயரான பிகில் பற்றி தெரியாது என்று காட்டியிருப்பதில் நம்பகத்தன்மை இல்லை. அதைப் போல கடைசியிலாவது பிகில் யார் என்பதை அந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு தெரியப்படுத்தாமல் விட்டுவிட்டதும் படத்தின் மைனஸ் விஷயங்களாக இருக்கிறது.

படத்தின் முதல் பாதி எந்த சுவாரஸ்ய விஷயங்களும் இல்லாமல் பயணிப்பதால் சோர்வையே தருகிறது. ஆனால் அதை இரண்டாம் பாதியில் வரும் சில எமோஷன் காட்சிகள், விறுவிறுப்பான விளையாட்டு, கிளைமேக்ஸ் சரி செய்து விடுகிறது. அதற்கு படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் ஜீ.கே.விஷ்ணுவின் பங்களிப்பு குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் படங்கள் என்றால் பாடல்கள், பின்னணி இசை என்று இரண்டிலும் கவனம் செலுத்தி ரசிக்க வைத்திருப்பார். ஆனால் இப்படத்தை பொறுத்தவரை ஓரிரு பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிதாக கவனம் பெறவில்லை. இதுபோன்ற குறைகளை தவிர்த்து, திரைக்கதையில் ஒரு சில புதிய விஷயங்களை சேர்த்து, படத்தின் நீளத்தை குறைத்து இயக்கியிருந்தால் ‘பிகில்’ நிச்சயமாக ஹாட்ரிக் அடித்திருக்கும்!

நடிகர்களின் பங்களிப்பு

ராயப்பனாக, பிகிலாக விஜய் இரண்டு வேடங்களிலும் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார் என்றாலும், ராயப்பன் கேரக்டரின் நடிப்பிலும் கெட்-அப்பிலும் விஜய் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பிகில் விஜய்யின் காதலி ஏஞ்சலாக வரும் நயன்தாரா அழகாக தோன்றி சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஆனால் பிகிலுக்கும், ஏஞ்சலுக்குமான காதல் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் பெரிய சுவாரஸ்யத்தை தரவில்லை. வில்லனாக வரும் ஜாக்கி ஷெராஃப் தனக்கு வழங்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். அதைப் போலதான் ‘கோச்’சாக வரும் கதிரும்! கால்பந்தாட்ட வீராங்கனைகளாக வரும் இந்துஜா, வர்ஷா, ரெபா மோனிகா ஜான், இந்திரஜா சங்கர் என்று அந்த அணியில் பங்கேற்று நடித்திருக்கும் அனைவரும் சிறந்த பங்களிப்பு செய்துள்ளனர். விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, ஐ.எம்.விஜயன் ஆகியோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கேரக்டர்களுக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.

1.விஜய்

2.ஒளிப்பதிவு

3.இரண்டாம் பாதியின் எமோஷன் காட்சிகள்

பலவீனம்

1.சுவாரஸ்யமில்லாத முதல் பாதி

2.படத்தின் அதிகபடியான நீளம்

3.படத்தொகுப்பு, பின்னணி இசை

மொத்தத்தில்…

சொல்லும்படியாக எந்த சுவாரஸ்ய விஷயங்களும் இல்லாத இந்த ‘பிகில்’ விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தராது. கதையிலும், திரைக்கதை அமைப்பிலும் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் பிகிலின் ஆட்டம் வெற்றித்தனமாக இருந்திருக்கும்!ஒருவரி பஞ்ச் : நேரத்தை குறைத்திருந்தால் விளையாட்டு இன்னும் சுவாரஸ்மாக இருந்திருகும்!

ரேட்டிங் : 5/10

#Bigil #Thalapathy63 #Nayanthara #AGSEntertainment #BigilInIMax #BigilFromOct25 #PodraVediya #Vijay #Atlee #ARRahman #ArchanaKalpathi #KalpathiSAghoram

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;