சிவகுமார் துவக்கி வைத்த ‘கபடதாரி’

சிபிராஜ், நந்திந்தா ஸ்வேதா நடிக்கும் ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவகுமார் துவக்கி வைத்தார்!

செய்திகள் 1-Nov-2019 3:21 PM IST VRC கருத்துக்கள்

‘ஜாக்சன் துரை’, ‘சைத்தான்’, ‘சத்யா’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இயக்கும் படம் ‘கபடதாரி’. இந்த படத்தில் சிபிராஜ், சத்யராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், பூஜா குமார் ஆகியோர் நடிக்கிறார்கள் என்றும் இந்த படத்தை ‘கிரியேட்டிவ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் தனஞ்சயன் மற்றும் லலிதா தனஞ்சயன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள் என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார் கிளாப் அடித்து படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இன்று நடைபெற்ற பூஜையில் இயக்குனர் சசி, தியா மூவீஸ் அதிபர் பி.பிரதீப், தயாரிப்பாளர் கமல் போஹ்ரா, தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக், சிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் இயக்குனர் அன்பு ஆகியோரும் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள். இன்று முதல் படப்பிடிப்பு முழு வீச்சில் நடத்தி ‘கபடதாரி’யை வருகிற மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு சைமன் கே.கிங் இசை அமைக்கிறர். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார்.

#Sibiraj #Sathyaraj #PradeepKrishnamoorthy #Ranga #Maayon #Walter #JacksonDurai #GDhanjayan #LalithaDhananjayan #CreativeEntertainersAndDistributors #SimonKKing #Nasser #JohnMahendran #Kabadadaari #PoojaKumar #KabadadaariPoojaToday

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;