ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

சினிமாவில் பல்வேறு சாதனைகள் புரிந்த ரஜினிகாந்துக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குகிறது!

செய்திகள் 2-Nov-2019 12:42 PM IST VRC கருத்துக்கள்

மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க முடிவு செய்து அதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள்து. சினிமாத்துறையில் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக செய்து வரும் பல்வேறு சாதனைகளை கருத்தில் கொண்டு அவரை கௌரவிக்கும் விதமாக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது இம்மாதம் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டும் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#IconOfGoldenJubliee #Rajinikanth #Thalaivar #Superstar #MinistryOfInformationAndBroadcasting #IFFAGoa

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;