‘டில்லி திரும்பவும் வருவான்…’ ‘கைதி-2’வை மீண்டும் உறுதி செய்த கார்த்தி!

கைதி இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை மீண்டும் உறுதி செய்த கார்த்தி

செய்திகள் 4-Nov-2019 11:24 AM IST Top 10 கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து சென்ற மாதம் 25-ஆம் தேதி வெளியான படம் ‘கைதி’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று, மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. படம் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில் இன்னமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ‘கைதி ’ஓடிக்கொண்டிருக்க, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்பதை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு ட்வீட்டின் மூலமாகவும், நடிகர் கார்த்தி சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலமாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ‘கைதி’ படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘என் மீது அளவற்ற அன்பு செலுத்தும் சகோதர சகோதரிகளே… என்னுடைய எல்லா ஏற்ற இறக்கங்களிலும் எனக்கு உறுதுணையாக இருப்பவர்களே….உங்களை பெருமைப்படுத்த இன்னும் கடுமையாக ஊழைப்பேன்… உங்களுக்காக டில்லி மீண்டும் வருவான்!’’ என பதிவிட்டு ‘கைதி’ இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

இந்த தகவல் கார்த்தியின் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சிப்படுத்தும் என்பது நிச்சயம்!

#Karthi #Kaithi #LokeshKanagaraj #DreamWarriorPictures #SRPrabhu #SRPrakashBabu #VivekandaPictures #SamCS #SathyanSooryan #PhilominRaj #Khaidi #DilliWillBeBack #Kaithi2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;