‘ஆதித்யா வர்மா’வின் புதிய ரிலீஸ் தேதி!

இம்மாதம் 8-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘ஆதித்யா வர்மா’வின் ரிலீஸ்  21-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது!

செய்திகள் 6-Nov-2019 4:21 PM IST Top 10 கருத்துக்கள்

தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியுள்ள படம் ‘ஆதித்ய வர்மா’. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டியிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசாயா இயக்கியுள்ள இந்த படத்தில் துருவ் விக்ரம், பாலிவுட் நடிகை பனிதா மற்றும் பிரியா ஆனந்த் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் சென்சார் காட்சி நடைபெற்று படத்திற்கு ‘A’ வழங்கப்பட்ட நிலையில் இப்படம் இம்மாதம் 8-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்மாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இப்படத்தின் ரிலீஸை இம்மாதம் 21-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள தகவலை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். இம்மாதம் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி உள்ள நிலையில் எப்படியும் இந்த மாதம் ‘ஆதித்யா வர்மா’ ரிலீசாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு அர்ஜுன் ரெட்டின் படத்திற்கு இசை அமைத்த ரதனே இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
#AdithyaVarma #DhruvVikram #BanitaSandhu #PriyaAnand #Gireesaya #ArjunReddy #KabirSingh #AdithyaVarmaAudioLaunch #Vikram #SivaKarthikeyan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;