3-ஆவது வாரத்தில் அதிகமாக 100 தியேட்டர்களைப் பிடித்த ‘கைதி’

முதலில் 250 தியேட்டர்களில் வெளியான கைதி இப்போது 350 தியேட்டர்களில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது!

செய்திகள் 8-Nov-2019 11:35 AM IST Top 10 கருத்துக்கள்

கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு சென்ற மாதம் 25-ஆம் தேதி வெளியான படம் ‘கைதி’. எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோரின் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் திருப்பூர் விவேக்கின் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு விமர்சன ரீதியாகவும் இப்படம் பேசப்பட்டது.

சென்ற மாதம் 25-ஆம் தேதி கைதியுடன் விஜய்யின் ‘பிகில்’ படமும் வெளியாகியிருந்த நிலையில் ‘கைதி’ படம் தமிழகத்தில் 250 தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியிருந்தது. ஆனால் இப்போது ‘கைதி’ படம் வெளியாகி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் ‘கைதி’ தமிழகத்தில் கூடுதலாக 100 தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிற தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு ட்வீட் செய்துள்ளார். ‘கைதி’ தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகள் என்று வெளியான எல்லா இடங்களிலும் நல்ல வசூல் குவித்து வருவதால் ‘கைதி’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‘கைதி’ மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ள நிலையில் இப்பத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிற தகவலை சமீபத்தில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜும், கார்த்தியும் தெரிவித்திருந்தனர்.

#Karthi #Kaithi #LokeshKanagaraj #DreamWarriorPictures #SRPrabhu #SRPrakashBabu #VivekandaPictures #SamCS #SathyanSooryan #PhilominRaj #Khaidi #DilliWillBeBack #Kaithi2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;