சல்மான்கான் படத்தில் பரத்!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் நடிக்கும் படத்தில் இணைந்த பரத்!

செய்திகள் 9-Nov-2019 12:01 PM IST Top 10 கருத்துக்கள்

ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, அதன் பிறகு ‘காதல்’, ‘பட்டியல்’, ‘எம்டன் மகன்’, ‘கண்டேன் காதலை’ உள்ளிட்ட 32-க்கும் அதிமான படங்களில் கதாநாயகனாக நடித்திருபபவர் பரத். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘காளிதாஸ்’. இந்த படம் தவிர் மற்றும் சில தமிழ் படங்களில் நடித்து வரும் பரத்துக்கு சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘ராதே’ என்ற ஹிந்தி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான்கான் இப்போது பிரபு தேவா இயக்கத்தில் ‘தபாங்-3’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் 20-ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் சல்மான்கான் அடுத்தும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படத்தில் படம் முழுக்க சல்மான்கானோடு வரும் முக்கிய கேரக்டரில் பரத் நடிக்கிறார். அது என்ன வேடம் என்பதை இயக்குனர் பிரபுதேவா சஸ்பென்சாக வைத்து இருக்கிறார். ‘ராதே’ படத்திற்காக பரத் நான்கு மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் சல்மான் கானுடன் பரத் நடிக்கும் காட்சிகள் இப்போது மும்பையில் படமாகி வருகிறது.

#SalmanKhan #Bharath #Kaalidas #PrabhuDeva #Radhe #Dabangg3

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;