சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி, சாயா சிங் அகன்ஷாபுரி ஆகியோர் நடிக்கும் படம் “ஆக்ஷன்’. இந்த படம் வருகிற 15-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகிறது. ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்திரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படம் பற்றி இயக்குனர் சுந்தர்.சி.பேசும்போது,
‘‘இது போன்று ஒரு ஆக்ஷன் படத்தை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறி உள்ளது. இதுபோன்ற பெரிய படங்களுக்கு செலவு செய்ய தயாரிப்பாளர் ரவிசந்திரன் மாதிரி தயாரிப்பாளர் அமைவது வரம். இந்த படத்தில் மிலிட்டரி, தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இருக்கிறது. இப்படத்தில் வில்லி கிடையாது, வில்லன் தான். அந்த வில்லன் யார் என்பதுதான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும். விஷால் இயக்குநரின் நடிகர். ஒருமுறை அவர் ஒப்பந்தம் ஆகிவிட்டால் நாம் என்ன சொல்கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய்வார். மேலிருந்து குதிக்க சொன்னேன். உடனே குதித்து விட்டார். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது அவருக்கு நிறைய அடிப்பட்டது. அதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் ரொம்பவும் சிரத்தை எடுத்து இப்படத்தில் நடித்துள்ளார் விஷால்! இவரை தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களில் முடித்திருக்க முடியாது. அதற்கு தயாரிப்பாளரும் ஒத்துழைப்புக் கொடுத்தார். அதைப்போலதான் இப்படத்தில் நடித்துள்ள தமன்னாவும், அகன்ஷாபுரியும். தமன்னா சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார். இருவரும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்துடன்தான் திரும்பி போவார்கள். அந்த அளவுக்கு படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது’’ என்றார் சுந்தர்.சி.
இந்த படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜான், கபோடிகா, டெஹ்ராடூன், ரிஷிகேஷ், பாகு, இஸ்தான்புல், ஜெய்ப்பூர், ஹைதாராபாத் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.
#SundarC #TridentArts #TamannahBhatia #Vishal #HiphopTamizha #KabirDuhanSingh #Action #AishwaryaLekshmi #ActionFromNov15
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
வெற்றிப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் எடுப்பது டிரெண்டாகி உள்ள நிலையில் சுந்தர்.சி.இயக்கத்தில்...