சுந்தர்.சி.யுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும்! – விஷால்

சுந்தர்.சி.இயக்கத்தில் ‘ஆக்‌ஷன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து விஷால் கூறியவை….

செய்திகள் 9-Nov-2019 1:50 PM IST Top 10 கருத்துக்கள்

‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் ‘ஆக்‌ஷன்’. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை சுந்தர்.சி. இயக்க, இப்படத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்ய லட்சுமி, சாயா சிங் அகன்ஷாபுரி முதலானோர் நடித்துள்ளனர். வருகின்ற 15-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் பேசும்போது,

‘‘சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். ‘சங்கமித்ரா’ தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டார். இது சுந்தர்.சி.யின் இன்னொரு கனவு படம்! என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகளை கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’ தான். இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிக்கும்போது என் சாவை நான் கண்ணால் பார்த்தேன். அப்படி ஒரு ரிஸ்கான காட்சி அது! வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் இந்த படத்தில் பணியாற்றியது மாதிரி பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும். அதைப்போல ஒவ்வொருவரும் சுந்தர்.சி.யுடன் ஒரு படத்திலாவது உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும். நிறைய விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். ஒரு உதவி இயக்குனராக நானும் சுந்தர்.சி.யிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அவரிடம் கற்றுக் கொண்ட விஷயங்களை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன். இந்த படம் இவ்வளவு பிரம்மாண்டமாக உருவாக சுந்தர்.சி.யும், தயாரிப்பாளர் ரவீந்திரனும் தான் காரணம். இதுபோன்ற ஒரு படம் எனக்கு அமைந்ததில் மிகப்பெரிய சந்தோஷம்! இந்த படத்தை பெரிய திரையில் காணுங்கள். இப்படத்தில் நடித்த அனைவரும் திறமையானவர்கள். அதைப்போல இப்படத்தில் பணிபுரிந்துள்ள டெக்னீஷியன்களும் மிகத் திறமையானவர்கள்’’ என்றார் விஷால்!
#SundarC #TridentArts #TamannahBhatia #Vishal #HiphopTamizha #KabirDuhanSingh #Action #AishwaryaLekshmi #ActionFromNov15

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;