ஆரவ் நடிக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் ரிலீஸ் தேதி?

சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தாபர் நடிக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 11-Nov-2019 1:11 PM IST Top 10 கருத்துக்கள்

‘சுரபி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்கும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’. சரண் இயக்கும் இந்த படத்தில் ஆரவ் கதாநாயகனாக நடிக்க, காவ்யா தாபர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், ரோகிணி, தேவதர்ஷிடனி, நிகிஷா பட்டேல் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, சைமன் கே.கிங் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மார்க்கெட் ராஜா எம்.பி.எபி.எஸ்.’ படம் இம்மாதம் 29-ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலை படக்குவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆரவ் நடிப்பில் ராஜபீமா என்ற ஒரு படமும் உருவாகி வருகிறது.

#Arav #MarkertRajaMBBS #NikeshaPatel #RadhikaaSarathKumar #RajaBheema #KavyaThapar #MarketRajaMBBSFromNov29th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;