‘ஹீரோ’வுடன் களம் இறங்கும் ஜீவா படம்!

ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும்  ‘சீறு’ டிசம்பர் 21-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 12-Nov-2019 5:15 PM IST Top 10 கருத்துக்கள்

‘வா டீல்’, ‘றெக்க’ ஆகிய படங்களை இயக்கிய ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், காயத்ரி கிருஷ்ணா, நவ்தீப், சதீஷ், வருண் ஆகியோர் நடிக்கும் படம் ‘சீறு’. ஐசரி கணேஷின் ‘வேல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் மாயவரம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் ரக படமாகும். அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தை டிசம்பர் 21-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ திரைப்படம் 20-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில் இப்போது ஜீவாவின் ‘சீறு’ 21-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால் ஒரு நாள் இடைவெளியில் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’வும், ஜீவாவின் ‘சீறு’வும் வெளியாக இருக்கிறது. டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பிரசன்ன குமார் கவனித்துள்ளார். படத்தொகுப்பை கிஷோர் செய்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;