‘சர்காரை’ தொடர்ந்து ‘தளபதி-64’ படத்திலும் இணைந்த பிரபலம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய்-64’ படத்தில் இணந்த நடிகர் பிரேம் குமார்!

செய்திகள் 18-Nov-2019 11:20 AM IST Top 10 கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய்-64’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தில் அடுத்தடுத்து பல பிரபலங்கள இனைந்து வருகின்றனர். ஏற்கெனவே இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ், கௌரி கிஷன் , வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் என்று ஏராளமானோர் இணைந்து நடித்து வரும் நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகர் பிரேம் குமாரும் இணைந்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் விஜய்யின் அண்ணனாக நடித்திருந்த பிரேம் குமார் இப்போது மீண்டும் விஜய்யுடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இது குறித்து பிரேம் குமார் ட்வீட் செய்திருப்பதில், ‘‘தளபதி-64’ படத்தில் இணைந்தது மகிழ்ச்சி! மீண்டும் தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி! எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

#Thalapathy64 #Vijay #Anirudh #LokeshKanagaraj #SathyanSooryan #PhilominRaj #SatheeshKumar #Shanthanu #MalavikaMohanan #StuntSilva #Thalapathy64ShootingStartsFromToday #VijaySethupathi #AntonyVarghesePepe

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;