பூஜையுடன் துவங்கியது சந்தானத்தின் ’ டிக்கிலோனா’

சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியது!

செய்திகள் 18-Nov-2019 3:50 PM IST Top 10 கருத்துக்கள்

‘அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயரித்த ‘கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ கோட்டபடி ராஜேஷ் சந்தானம் நடிக்க ‘டிக்கிலோனா’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றும் இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தின் தயாரிப்பில் ராஜேஷுடன் இயக்குனர் சினீஷும் கை கோர்க்கிறார் என்றும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். கார்த்திக் யோகி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் சந்தானத்துடன் ஒரு முக்கிய கேரக்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கும் நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். அரவிந்த் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோமின் மேத்யூ படத்தொகுப்பு செய்கிறார். சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;