‘கைதி’ தியேட்டரில் சரவெடி! - கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு!

கார்த்தியின் ‘கைதி’ படத்தை பார்த்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்!

செய்திகள் 18-Nov-2019 4:12 PM IST Top 10 கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு சென்ற மாதம் 25-ஆம் தேதி வெளியான படம் ‘கைதி’. எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோரின் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் திருப்பூர் விவேக்கின் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படம் ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பு பெற்று மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு விமர்சன ரீதியாகவும் இப்படம் பேசப்பட்டது. ‘கைதி’ வெளியாகி 25-ஆவது நாளான நிலையில் இப்படம் இன்னமும் நிறைய தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இந்த படத்தை பார்த்து பல பிரபலங்கள் பாராட்டு தெரித்துள்ள நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜும் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘கைதி’ படம் பார்த்து அவர் ட்வீட் செய்திருப்பதில் #Kaithi is a Kick-ass film with lot of Wow moments through out....Though am bit late.. Could get the Diwali saravedi feel in theatre... என்று குறிப்பிட்டுள்ளார்.

‘கைதி’ தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகளிலும் வெற்றிகரமாக ஓடி வசூல் ஈட்டியிருப்பதால் ‘கைதி’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பதோடு, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

#Kaithi #KaithiReview #Anirudh #DreamWarriorPictures #Karthi #LokeshKanagaraj #Kathir #Shanthanu #KarthikSubbaraj #D40 #Dhanush

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;