‘மண்டேலா’ - முக்கிய தகவலை வெளியிட்ட இயக்குனர் பாலாஜி மோகன்!

அறிமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘யோகி’ பாபு நடிக்கும்  ‘மண்டேலா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

செய்திகள் 19-Nov-2019 12:46 PM IST Top 10 கருத்துக்கள்

‘தர்மபிரபு’, ‘கூர்கா’ முதலான படங்களை தொடர்ந்து ‘யோகி’ பாபு கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘மண்டேலா’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கி வருகிறார். இயக்குனர் பாலாஜி மோகனின் ‘OPEN WINDOW’, சஷிகாந்தின் ‘Y NOT STUDIOS’, மற்றும் RELIANACE ENTERTAINMENT, WISHBERRY FILMS ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்தது என்ற தகவலை இயக்குனரும், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார்.

‘மண்டேலா’வில் ‘யோகி’ பாபுவுடன் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், ‘டு-லெட்’ படப் புகழ் ஷீலா ராஜ்குமார், கண்ணா ரவி ஆகியோரும் நடிக்க. இப்படத்தின் ஒளிப்பதிவை ‘மேயாத மான்’, ‘LKG’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த வித்யு அய்யனா கவனித்துள்ளார். ‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய படங்களின் படத்தொகுப்பாளரான ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். அறிமுகம் பரத் சங்கர் இசை அமைக்கிறார். இந்த படத்தை இயக்கி வரும் மடோன் அஷ்வின் தேசிய விருது பெற்ற ‘தர்மம்’ என்ற குறும்படத்தை இயக்கியவராவர். அத்துடன் இவர் ‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

#YogiBabu #MadonneAshwin #OpenWindow #BalajiMohan #YNOTStudios #WishberryFilms #RelianceEntertainment #VidhuAyyanna #PhilominRaj #BharathSankar #MandelaShootWrappedUp #Mandela

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;