‘கைதி’யில் கொசு மருந்து அடிச்ச குட்டி மிஷினுக்கும் நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்!

‘கைதி’ 25-வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓட, நன்றி தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

செய்திகள் 19-Nov-2019 3:00 PM IST Top 10 கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடித்து சென்ற மாதம் 25-ஆம் தேதி வெளியான படம் ‘கைதி’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இந்த படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ள நிலையிலும் இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். நேற்று முன் தினம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ‘கைதி’ படத்தை பார்த்து ‘தியேட்டரில் சரவெடி’ என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த தகவலை நேற்று பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில் ‘கைதி’ படத்தை தொடந்து விஜய் நடிப்பில் ‘தளபதி-64’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், ‘கைதி’ 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருப்பதில், ‘‘கைதி’ வெற்றிகரமாக 25-வது நாள்! இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும், ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி! அப்படியே அந்த கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி நன்றி’’ என்று மகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜின் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் ரத்னகுமார், ‘‘அப்படியே ‘தளபதி-64’ கிளைமேக்ஸ்ல என்ன Weapon வரப் போகுதுனு சொன்னீங்கன்னா நல்ல இருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘மேயாத மான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இப்போது ‘தளபதி-64’ படத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;