ரஜினிக்கு அமிதாப்பச்சன் விருது வழங்குகிறார்!

இன்று கோவாவில் துவங்கும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குகிரர் அமிதாப்பச்சன்!

செய்திகள் 20-Nov-2019 11:27 AM IST Top 10 கருத்துக்கள்

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழா கடந்த சில ஆண்டுகளாக கோவாவில் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான 50-வது சர்வதேச திரைப்பட விழாவும் கோவாவிலேயே இன்று (20-11-19) முதல் நடக்கிறது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை ரஜினிகாந்துக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் வழங்க இருக்கிறார்.

சினிமாவில் பல்வேறு சாதனைகள் புரிந்த ரஜினிகாந்துக்கு மத்திய அரசு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க இருக்கிறது என்ற தகவலை இம்மாதம் 2-ஆம் தேதி மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சம் செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று ரஜினிகாந்துக்கு அவ்விருந்து வழங்கப்படுகிறது. கோவாவில் இன்று துவங்கும் இந்த சர்வதேச திரைப்பட விழா வருகிற 28-ஆம் தேதி வரை தொடர்ந்து நடக்க இருக்கிறது.

இந்த விழாவில் 76 நாடுகளில் தயாரிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் முதல் படமாக இத்தாலி நாட்டு படமான ‘டிஸ்பைட் தி போக்’ என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்தியன் பனோரமா பிரிவில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

#IconOfGoldenJubliee #Rajinikanth #Thalaivar #Superstar #MinistryOfInformationAndBroadcasting #IFFAGoa #RajinikanthReceivesAwardFromAmitabhBachchan #AmitabhBachchan #Parthiban #OththaSerupuSize7 #LakshmiRamakrishnan #HouseOwner

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;