‘ஆடை’யை தொடர்ந்து அமலா பால் நடிப்பில் வெளியாகும் படம்!

அமலா பால் நடிக்கும் அதோ அந்த பறவை போல டிசம்பர் 27-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 21-Nov-2019 4:36 PM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் நடிக்கும் படம் அதோ அந்த பறவை போல. செஞ்சுரி இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படம் கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற மாதிரியான அட்வெஞ்சர் த்ரில்லர் கதை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் சென்சார் காட்சி நடைபெற்று, படத்திற்கு சென்சார் குழுவினர் ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இப்போது படத்தி ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘அதோ அந்த பறவை போல’ படம் டிசம்பர் 27-ஆம் தேடி வெளியாகும் என்ற அறிவிப்பை இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கியுள்ள ‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்’ வெளியிட்டுள்ளது. அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த படத்தில் அமலாபாலுடன் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், குழந்தை நட்சத்திரம் பிரவீன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஜான் ஆப்ரகாம் செய்ய, கலை இயக்கத்தை சரவணன் கவனித்துள்ளார்.

#AdhoAndhaParavaiPola #AmalaPaul #KRVinoth #CenturyInternationalFilms #AshishVidyarthi #SamirKochhar #JakesBejoy #AdhoAndhaParavaiPolaCensoredWithU #LibraProductions #AdhoAndhaParavaiPolaFromDec27th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;