‘எம்.ஜி.ஆர்.மகன்’ படம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட சமுத்திரக்கனி!

பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடிக்கும் எம்.ஜி.ஆர்.மகன் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்தது!

செய்திகள் 22-Nov-2019 11:43 AM IST Top 10 கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமாராஜா’ ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இப்போது இயக்கி வரும் படம் எம்.ஜி.ஆர்.மகன். சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்தது என்பதை இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் சமுத்திரக்கனி ட்வீட் செய்துள்ளார். இந்த படத்தில் சசிக்குமாருடன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த மிருணாளினி ரவி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், சிங்கம் புலி, ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘Screen Scene Media Entertainment Pvt. Ltd’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படமும் பொன்ராம் இதற்கு முன் இயக்கிய படங்கள் போல் கிராமத்து பின்னணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவை வினோத் ரத்தினசாமி கவனித்திருக்க, அந்தோணி தாசன் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை விவேக் ஹர்ஷன் கவனிக்கிறார். கலை இயக்கத்தை துரைராஜ் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;