கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிக்குமார், ராணா, வேலா ராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இப்படம் பல்வேறு பிரச்சனைகளால் திட்டமிட்டபடி வெளியாகாமல் தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு இப்படத்தை விநியோகிக்கும் உரிமையை ‘வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டநேஷனல்’ நிறுவனர் ஐசரி கணேஷ் வாங்கினார். இதனை தொடர்ந்து இப்படம் இம்மாதம் 29-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வருகிற 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் வெளியாகும் அதே நாளில் தனுஷ் நடித்துள்ள ‘பக்கிரி’ படம் சீனாவில் ரிலீசாக இருக்கிறது. இப்போது தமிழ் படங்களுக்கு சீனாவிலும் நல்ல மார்க்கெட் இருந்து வரும் நிலையில் தனுஷின் ‘பக்கிரி’ அங்கு நிறைய தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒரே தினத்தில் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்கள் வெளியாக இருப்பது அவரது ரசிகர்ளுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாகும்.
தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்த ‘கைதி’, விஜய் நடித்த ‘பிகில்’ ஆகிய இரண்டு படங்கள் 25-10-19...
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்...
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்...