அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் படத்தின் புதிய தகவல்!

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் படம் பற்றிய புதிய தகவல்!

செய்திகள் 27-Nov-2019 4:36 PM IST Top 10 கருத்துக்கள்

‘பூமராங்' படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணனும், அதர்வும் இரண்டாவது குறையாக இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி துவங்கியது. ‘ MKRP புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனத்துடன் இயக்குனர் ஆர்.கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அத்ரவாவுடன் ‘பிரேமம்’, ‘கொடி’ படங்கள் புகழ் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்கிறார். தொடந்து நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில் 15 நாட்கள் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யாவில் உள்ள அசர்பெய்ஜான் நாட்டுக்கு பறக்க இருக்கிறது. இது குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் பேசும்போது,

"பழைய மகாபலிபுரம் சாலையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட வீடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்தினோம். இதைத் தொடர்ந்து, பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக ஒட்டு மொத்த படக்குழுவும் அசர்பெய்ஜான் புறப்பட இருக்கிறது. இத்துடன் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விடும். எனக்கும் அதர்வாவுக்கும் இந்தப் படம் முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்திருக்கிறது. விறுவிறுப்பான த்ரில்லர் படங்களிலேயே நடித்துப் பழக்கமான அதர்வாவுக்கும் இது புத்துணர்ச்சியூட்டும் படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெகு விரைவில் வெளியிட இருக்கிறோம்" என்றார்.

இந்த படத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரனுடன் ‘வி.ஐ.பி.’ புகழ் அமிதஷ் பிரதான், ஆடுகளம் நரேன், காளி வெங்கட், ஜெகன், வித்யுலேகா ராமன், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியொரும் நடிக்கின்றனர். இப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். ஷம்மி என்கிற சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வாவும், நடனக் காட்சிகளை சதீஷும் அமைக்கின்றனர்.

#DirectorRKannan #AnupamaParameswaran #Atharvaa #MKRPProductions #MasalaPix

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;