ஆர்யா படத்தில் இணைந்த ‘90ML’ நடிகை!

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும்  ‘டெடி’ படத்தில் ‘90ML’ மசூம் சங்கரும்  நடிக்கிறார்!

செய்திகள் 27-Nov-2019 4:42 PM IST Top 10 கருத்துக்கள்

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும் படம் ‘டெடி’. இந்த படத்தில் ஆர்யா, சாயிஷா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் மகிழ் திருமேனியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மகிழ் திருமேனி முதன் முதலாக நடிக்கும் இப்படத்தில் அவர் கேரக்டர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் சமீபத்தில் நிறைவடைந்தது என்ற தகவலை இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் ட்விட்டரில் பதிவு செய்ய, அந்த தகவலை நாமும் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் ‘டெடி’ படத்தில் ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியன ‘90ML’ படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்திருந்த மசூம் ஷங்கரும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்தது என்றும் தகவலையும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் வெளியிட்டுள்ளார். ‘டெடி’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்காக மசூம் ஷங்கரும் இயக்குனர் சகதி சௌந்தர் ராஜனுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதில், ஆர்யா, கருணாகரன் ஆகியோருடன் நடித்தது இனிய மறக்க முடியாத அனுபவம்’ என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். யுவா ஒளிப்பதிவு செய்கிறார். ‘காளி’, ‘திமிரு பிடிச்சவன்’ ஆகிய படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிந்த சக்தி சரவணன் இப்படத்திற்கான சண்டை காட்சிகளை அமைக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படப்புகழ் சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்யும் இப்படம் குழந்தைகளையும் கவரும்விதமாக உருவாகி வருகிறது

#Teddy #Arya #SayyeeshaSaigal #ShaktiSoundarRajan #DImman #StudioGreen #Sathish #Karunakaran #90ML #MasoomShankar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;