‘பிகில்’ வேற ‘ஜடா’ வேற! -கதிர்

எமோஷன்ஸும் மாறுபட்ட கதைக்களமும் கொண்ட படம் ஜடா! -கதிர்

செய்திகள் 28-Nov-2019 11:20 AM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஜடா’. இந்த படத்தில் கதிருடன் ரோஷினி, ‘யோகி’ பாபு, சமுத்திரக்கனி, ராஜ்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். ‘சிகை’, ‘பரியேறும் பெருமாள்’ என்று மாறுபட்ட கதைக்களங்களை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கதிர் இப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘பிகில்’ படத்திலும் கதிர் கால்பந்தாட்ட வீரராகவும், கோச்சாகவும் நடித்திருந்தார். ‘பிகில்’ படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஜடா’ டிசம்பர் 6-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது அப்போது கதிர் பேசும்போது,

‘‘ஜடா’ வழக்கமான ஒரு படம் கிடையாது. இந்த படத்தில் நிறைய ஃப்ளேவர்ஸ் இருக்கிறது. நிறைய எமோஷன்ஸ் இருக்கிறது. அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது. இண்டர்நேஷனல் ஃபுட்பாலுக்கும் ஸ்ட்ரீட் ஃபுட்பாலுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் நிறைய இந்த படத்தில் இருக்கும். ‘பிகில்’ படமும் ஃபுட்பால் சம்பந்தப்பட்ட படம், இதுவும் ஃபுட்பால் சம்பந்தப்பட்ட படமென்று நிறைய பேர் கேட்டார்கள். ஆனால் ‘பிகில்’ படத்தின் கதைக்களம் வேற, ‘ஜடா’ படத்தின் கதைக்களம் வேற! அதை நீங்கள் படத்தை பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தில் அமைந்தது மாதிரி ஒரு சிறப்பான டீம் இனி அமையுமா என்று தெரியவில்லை. குறிப்பாக இயக்குனர் குமரனின் கிரியேட்டீவ் விஷயங்களும், அதை படமாக்கிய ஒளிப்பதிவாளர் சூர்யா, படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு உயிரோட்டம் தரும் விதமாக பின்னணி இசை அமைத்த சாம்.சி.எஸ்.ஆகியோரின் பங்களிப்பு இப்படத்தில் மிகவும் பேசப்படும்’’ என்றார்.

‘தி பொயட் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த படத்தின் படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவின் கவனித்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்ரீகாந்த் கவனித்துள்ளார்.

#Jada #JadaFromDecember6th #Kumaran #ThePoetStudios #Kathir #SamCS #ARSoorya #RichardKevin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;