‘ஃபிப்ரவரி-14’ படத்தை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா, ப்ரியா ஆனந்த், வி.டி.வி.கணேஷ், ‘யோகி’ பாபு ஆகியோர் நடிக்கும் படம் ‘சுமோ’. ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படம் இந்தோ – ஜாப்பானை சேர்ந்த சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் இப்படத்தை பொங்கலுகு ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை டிசம்பர் 10-ஆம் தேதி வெளியிட இருக்கும் தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். பொங்கலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் வெளியாக இருக்கும் நிலையில் பொங்கல் ரேசில் சிவாவின் ‘சுமோ’வும் களம் இறங்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சுமோவின் ஒளிப்பதிவை ராஜீவ் மேனன் கவனித்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். படத்தொகுப்பை பிரவீன் கே.எல்.கவனித்து வருகிறார்.
#MirchiSiva #PriyaAnand #RajiniSuperstar #AgilaSuperstar #SumoFromPongal
#SumoTrailerFromDec10th
தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியுள்ள படம் ‘ஆதித்ய வர்மா’. ‘அர்ஜுன் ரெட்டி’...
தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியுள்ள படம் ‘ஆதித்ய வர்மா’. ‘அர்ஜுன் ரெட்டி’...
ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் கதாநாயகன், கதாநாயகியாக நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக...