பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் படம், பூஜையுடன் துவங்கியது!

அறிமுக இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் படம்!

செய்திகள் 28-Nov-2019 2:38 PM IST Top 10 கருத்துக்கள்

மாறுபட்ட கேரக்டர்களையும், கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் பாபி சிம்ஹாவும் ஒருவர்! இவர் இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்கும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் பாபி சிம்ஹா. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் பூஜையுடன் துவங்கியது. ‘SRT எண்டெர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனமும் ‘முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹாவுடன் கதாநாயகியாக காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார். மிக மாறுபட்ட ஒரு கதைக்களத்துடன் இப்படம் உருவாக இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை சுனில் எஸ்.கே.கவனிக்கிறார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளரான விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.

#BobbySimha #KashmiraParadeshi #RamananPurushothama #MudrasFilmFactory #SRTEntertainment #VivekHarshan #RajeshMurugesan #SunilSK

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி 2 ட்ரைலர்


;