‘தளபதி-64’ல் இணைந்த ‘கைதி’ பிரபலம்!

‘கைதி’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விஜய்-64’ படத்திலும் நடிக்கிறார் அர்ஜுன் தாஸ்!

செய்திகள் 2-Dec-2019 2:34 PM IST Top 10 கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி-64’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தில் அடுத்தடுத்து பல பிரபலங்கள இனைந்து வருகின்றனர். ஏற்கெனவே இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ், கௌரி கிஷன் , வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் என்று பலர் நடித்து வரும் நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸும் இணைந்துள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கைதி’ படத்தில் வில்லனாக நடித்தவர் அர்ஜுன் தாஸ். ‘கைதி’ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி-64’ நடிக்க வாய்ப்பு வழங்கியதற்கு அர்ஜுன் தாஸ் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்யமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இசைக்கு அனிருத், ஒளிப்பதிவுக்கு சத்யன் சூரியன், படத்தொகுப்புக்கு ஃபிலோமின் ராஜ் என்று பெரிய டெக்னீஷியன்கள் கூட்டணி அமைந்துள்ள இப்படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;