‘தர்பாரு’டன் பொங்கலுக்கு வெளியாகும் ஒரே ஹீரோவின் 2 படங்கள்!

பொங்கலுக்கு ‘தர்பார்’, பொன்மாணிக்க வேல், சுமோ, எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம் ஆகிய ஐந்து படங்கள் வெளியாக இருக்கிறது!

செய்திகள் 2-Dec-2019 2:42 PM IST Top 10 கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படம் துவங்கியபோதே இப்படம் பொங்கல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரஜினியின் ‘தர்பார்’ பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில் A.C.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெருத்துராஜ் நடிக்கும் ‘பொன்மாணிக்க வேல்’ படமும் பொங்கல் ரிலீஸ் என்று இப்பட குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். அதைப் போல எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தையும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாக அப்படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படங்களுடன் பொங்கலுக்கு சசிக்குமார் நடிக்கும் 2 படங்கள் வெளியாக இருக்கிறது. அதில் ஒரு படம் ‘ராஜவம்சம்’. அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி வரும் இந்த படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். செந்தூர் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சசிக்குமார் நிக்கி கல்ராணியுடன் ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடிக்கும் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் வருகிற பொங்கலுக்கு 5 படங்கள் வெளியாகும் சூழ்நிலை உருவாகியிருப்பதோடு, ஒரே நடிகரின் 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;