அருண் விஜய் படத்தில் இணைந்த பிரபலங்கள்!

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் படத்தில் இணைந்த மேலும் பல பிபலங்கள்!

செய்திகள் 9-Dec-2019 3:11 PM IST Top 10 கருத்துக்கள்

‘குற்றம்-23’ படத்தை தொடர்ந்து இயக்குனர் அறிவழகனும், அருண் விஜய்யும் இரண்டாவது முறையாக ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும் இந்த படத்தை ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜயராகவேந்திரா தயாரிக்கிறார் என்றும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக் ரெஜினா கெசன்ட்ரா நடிக்கிறார் என்றும் தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்தில் மேலும் பல பிரபலங்கள் இணைந்துள்ளனர். . அதில் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக அறிமுகம் ஸ்டெபி பட்டேல் நடிக்கிறார். இவர்களுடன் பகவதி பெருமாளும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ்.இசை அமைக்கிறார். ‘குற்றம்-23’ படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்த சக்தி வெங்கட்ராஜ் இப்படத்திலும் கலை இயக்குனராக பணிபுரிகிறார். இவர்களுடன் தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளரான வி.ஜே.சாபு ஜோசஃப் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்ய இருப்பது குறித்த தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜயுடன் துவங்கியது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;