ரஜினியுடன் முதன் முதலாக இணையும் பிரபல நடிகை!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தலைவர்-168’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்!

செய்திகள் 9-Dec-2019 5:49 PM IST Top 10 கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்கிறார். ரஜினி நடிப்பில் ‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர்-168’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான நடிகர்கள் நடிகைகள் தேர்வு நடந்து வரும் நிலையில் இப்படத்தில் சூரி நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவலை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவலை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். விஜய், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் இணையும் முதல் படம் இதுவாகும். இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;