இந்த வாரம் 9 படங்கள்!

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வாரம் 10 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள்து!

செய்திகள் 11-Dec-2019 4:12 PM IST Top 10 கருத்துக்கள்

ஒவ்வொரு வாரமும் வெளியாகிற படங்கள் வெற்றிகரமாக ஓடுகிறதோ இல்லையோ வாரா வாரம் நான்கைந்து திரைப்படங்கள் வெளியாகின்றன! அதிலும் இந்த அண்டின் இறுதி மாதம் இது என்பதால் இந்த மாதம் எக்கச்சக்க படங்கள் ரிலீஸுக்கு தயாராகி உள்ளன. சென்ற வாரம் ‘குண்டு’, ‘ஜடா’, ‘தனுசு ராசி நேயர்களே’, ‘இருட்டு’ ஆகிய 4 படங்கள் வெளியாகின! அந்த வரிசையில் இந்த வாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு 9 படங்கள் வெளியாக இருப்பதாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன! அந்த படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்!

1.கேப்மாரி

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கேப்மாரி’. எஸ்.ஏ.சந்திரசேகர்ன் இயக்கத்தில் வெளியாகும் 70-வது படம், ஜெய் நடிப்பில் வெளியாகும் 25-வது படம் என்ற சிறப்புக்களோடு 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.

2.சாம்பியன்

சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுகம் விஷ்வா கதாநாயகனாகவும், மிருணாளினி, சௌமிகா கதாநாயகிகளாகவும் நடித்துள்ள இப்படம் ஃபுட்பால் விளையாட்டை மையமாக் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் ந்டித்துள்ளனர். ஆர்.கே.சுரேஷின் 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

3.காளிதாஸ்

ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் பரத், அனி ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்கும் படம் ‘காளிதாஸ்’. பரத் காவல்த்துறை அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்ய, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

4.திருப்பதி சாமி குடும்பம்

சரத்குமார் நடிப்பில் ‘அரசு’, ‘கம்பீரம்’ உட்பட்ட படங்களை இயக்கிய சுரேஷ் இயக்கியிருக்கும் படம் ‘திருப்பதி சாமி குடும்பம்’. இந்த படத்தில் ஜே.கே., ஜெயகாந்த் என்று இரண்டு பேர் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் ஜெயன், தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர் மனோகர் ஆகியோரும் நடிக்கின்றனர். சாம் டி.ராஜ் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை ஒய்.எம்.முரளி கவனித்துள்ளார். ராஜா முகமது படத்தொகுப்பு செய்துள்ளார்.

5.கருத்துக்களை பதிவு செய்

எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் கதாநாயகனாகவும், உபாசனா கதாநாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தை ராகுல் பரமகம்சா இயக்கி உள்ளார். சமூகவலை தளங்கள் மூலம் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை மனோகர் கவனித்திருக்க, கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். .

6.தேடு

‘கிஷோர் சினி ஆர்ட்ஸ்’ சார்பாக சிவகாசி முருகேசன் தயாரித்துள்ள படம் ‘தேடு’. சுசி ஈஸ்வர் இயக்கியுள்ள இந்த படத்தில் சஞ்சய் கதாநாயகனாக நடிக்க, ‘ உறுதிகொள்’, ‘வீராபுரம்’ ஆகிய படங்களில் நடித்த மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிவகாசி முருகேசன், ‘கலக்கப் போவது யாரு?’ புகழ் பிரபாகரன், ராணி, கமலா ,சுவாமிதாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவை சபரி கவனித்திருக்க, வில்சி படத்தொகுப்பு செய்துள்ளார். டி.ஜே.கோபிநாத் இசை அமைத்துள்ளார்.

7.ஐம்பது ரூவா

நாகப்பட்டிணம் ஜி.பன்னீர் செல்வம் இயக்கத்தில் ‘கல்லூரி’ அகில், ‘அறம்’ சுனுலட்சுமி, கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘50 ரூவா’. வி.டி.பாரதி, வி.டி.மோனிஷ் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை தமிழ் செல்வன் கவனித்துள்ளார். படத்தொகுப்பை சதீஷ் குமார் கவனித்துள்ளார். கிராமத்து காதல் கதையாக உருவாகியுள்ள இப்படமும் இந்த வாரம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8.மெரினா புரட்சி

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து எம்.எஸ்.ராஜ் இயக்கியுள்ள ஆவணப் படம் ‘மெரினா புரட்சி’. ‘நாச்சியாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை வேல்ராஜ் செய்திருக்க, அல்ரூபியான் இசை அமைத்துள்ளார். தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார்.

9 சென்னை 2 பாங்காக்

ஜெய் ஆகாஷ், யோகி பாபு, சாம்ஸ், பொன்னம்பல்ம், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சென்னை 2 பாங்காக்’. யு.கே.முரளி இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை ஷாஜகான் கவனித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட 9 நேரடி தமிழ் படங்கள் இந்த வாரம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மம்முட்டி, பிராச்சி தெஹ்லன், உன்னி முகுந்தன், இனியா, கனிகா முதலானோர் நடித்த நடித்த மலையாள படமான ‘மாமாங்கம்’ படமும் தமிழ் மொழியில் இந்த வாரம் வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;