ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. நாளை (டிசம்பர்-12) ரஜினி பிறந்த நாள்! ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, அதனை கொண்டாடும் விதமாக ரஜினி நடிப்பில் 1995-ல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, இன்றைக்கும் பேசப்பட்டு வரும் ‘பாட்ஷா’ திரைப்படம் திரையிடப்படுகிறது. சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கம் உட்பட தமிழகத்திலுள்ள சில தியேட்டரக்ளில் திரையிடப்படும் ‘பாட்ஷா’ ரஜினி ரசிகர்களுக்கு ரஜினியின் பிறந்தநாள் ட்ரீட்டாக அமையவிருக்கிரது. 25 வருடங்களுக்கு முன் ‘சத்யா மூவீஸ்’ நிறுவனம் தயாரித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘பாட்ஷா’ படத்தை இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள ‘பாட்ஷா’வை பார்த்து ரசிக்க ரஜினியின் ரசிகர்கள் ஆவலாய் காத்திருக்கிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் உலகப் புகழ்பெற்ற டிஸ்கவரி சேனலின் பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து ‘MAN VS WILD என்ற...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘லிங்கா’. இந்த படத்தை ‘ராக்லைன் புரொடக்ஷன்ஸ்’...