விஜய் தேவரகொண்டா பட ரீமேக்கில் நடிக்கும் ஹரீஷ் கல்யாண்!

ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் படம்!

செய்திகள் 11-Dec-2019 5:03 PM IST Top 10 கருத்துக்கள்

ஹரீஷ் கல்யாண் நடித்த ‘தனுசு ராசி நேயர்களே’ படம் சென்ற வாரம் வெளியானது. இந்த படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்க ஹரீஷ் கல்யாண் அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. தெலுங்கில் விஜய்தேவரகொண்டா, ரீது வர்மா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பெல்லி சூப்புலு’. இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய, இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ‘மான்ஸ்டர்’ பட புகழ் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ‘A Studios LLP’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஏ.ஏல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கார்த்திக் சுந்தர் இயக்குகிரார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் தவிர ஹிந்தியில் வெளியாகி வெற்றி அடைந்த ‘விக்கி டானர்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் ‘தாராள பிரபு’ படத்திலும் ஹரீஷ் கல்யாண் நடித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;