நிஜ சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘நான் அவளைச் சந்தித்தப்போது…’

சந்தோஷ் பிரதாப், சாந்தினி இணைந்து  நடிக்கும் படம் ‘நான் அவளைச் சந்தித்தப்போது’

செய்திகள் 11-Dec-2019 5:04 PM IST Top 10 கருத்துக்கள்

‘சினிமா ப்ளாட்ஃபார்ம்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V.T. ரித்தீஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘நான் அவளைச் சந்தித்தபோது’. சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும், சாந்தினி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் மலையாள நடிகர் இன்னசண்ட் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் இவர்களுடன் ஜி.எம்.குமார், ‘பருத்தி வீரன்’ சுஜாதா, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், ‘காதல்’ சரவணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை எழுதி இயக்கி இருக்கும் எல்.ஜி ரவிசந்தர் படம் குறித்து பேசும்போது, ‘‘இப்படத்தின் கதை 1996-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கதைப்படி சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றும் ஹீரோ, வழக்கமாக வாய்ப்பு தேடி போகும்போது வழியில் இளம்பெண் ( நாயகியை ) ஒருவரை சந்திக்கிறார். சென்னையில் தன் உறவினரின் வீட்டிற்கு வந்த அந்த பெண் அட்ரஸை தொலைத்துவிட்டு வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார். ஹீரோ அவரை காப்பாற்றி அவரது ஊர் வரை கொண்டு போய் விட போகிறார். போன இடத்தில் ஊர்க்காரர்கள் ஒன்று கூடி இருவரையும் காதலர்கள் என தவறாக நினைக்க, அதன் பின்னர் நடக்கும் களேபரங்கள் தான் படத்தின் கதைக்களம்’’ என்றார்.

விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்திற்கு ஹிதேஷ் முருகவேல் இசை அமைத்துள்ளார். ஆர்.எஸ்.செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;