வெற்றிகரமாக 50 நாளை எட்டிய கார்த்தியின் ‘கைதி’

5-வது நாளை கடந்து இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கார்த்தியின் ‘கைதி’

செய்திகள் 13-Dec-2019 2:48 PM IST Top 10 கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிக்க, அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி வெளியான படம் ‘கைதி’. எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோரின் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் திருப்பூர் விவேக்கின் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படம் ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் படமாக அமந்ததோடு, இப்படத்திற்கு பல்வேறு பிரபலங்களின் பாராட்டுக்களும் கிடைத்தன. வித்தியாசமான கதைகளத்தில் உருவான இப்படம் கார்த்தியின் கேரியரில் ஒருமுக்கியமான படமாக அமைந்திருப்பதோடு இப்படத்தின் இரண்டாம பாகமும் உருவாக இருக்கிறது. அக்டோபர் 25-ஆம் தேதி வெளியான இப்படம் இன்னமும் சில தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க இப்படம் வெளியாகி இன்று ஐம்பதாவது நாளை எட்டியுள்ளது. இதனால் கைதி படக்குழுவினர் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;