மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ அதிகாரபூர்வ தகவல்கள்!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன்  முதலானோர் நடிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 14-Dec-2019 11:03 AM IST Top 10 கருத்துக்கள்

மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு பாங்காங்கில் துவங்கியது. மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியான நாளிலிருந்தே இப்படத்தின் மீது பெரும் ஏதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இப்படத்திற்கான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மற்றும் இப்படத்தை படமாக்குவதற்கான இடங்களை தேர்வு செய்யும் வேலைகளில் படு பிசியாக இயங்கி வந்தார் மணிரத்னம். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 10-ஆம் தேதி தாய்லாந்த் - பாங்காங்கில் துவங்கியது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சுபாஷ்கரனின் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும் இணைந்து மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், ஜெயராம், பிரபு, அஸ்வின் காக்குமனு, கிஷோர் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இவர்களுடன் மேலும் பல நடசத்திரங்கள் இப்படத்தில் இணைய உள்ளார்கள்.

இந்த படத்திற்கும் மணிரத்னத்தின் ஆஸ்தான் இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை ரவிவர்மன் கவனிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை மணிரத்னமும், குமரவேலும் எழுத, ஜெயமோகன் வசனங்கள் எழுதுகிறார். படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார். தயாரிப்பு உருவாக்கத்தை தோட்டாதரணியும், வாசிக் கானும் இணைந்து கவனிக்கிறார்கள். சண்டை பயிற்சியை ஷாம் கௌஷல் அளிக்கிறார். ஆடை வடிவமைப்பை ஏகா லக்கானி கவனிக்கிறார். நடனங்களை பிருந்தா அமைக்கிறார். பொன்னியின் செல்வனின் மேற்குறிப்பிட்ட தகவல்களை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

#ManiRatnam #PonniyinSelvan #AishwaryaRaiBachchan #AishwaryaRai #RParthiban

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;