‘ஆலம்பனா’ படப்பிடிப்பு துவங்கியது!

வைபவ், பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 14-Dec-2019 12:50 PM IST Top 10 கருத்துக்கள்

‘கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ கோடப்பாடி ராஜேஷும், சந்துரு என்பவரும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாரி கே.விஜய் இயக்க, ‘ஆலம்பனா’ என்ற பெயரில் ஒரு ஃபேண்டசி படம் உருவாகிறது என்ற தகவலை ஏற்கெனவே பதிவு செய்திருந்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன துவங்கியது. இந்த படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். இவர்களுடன் முனிஸ்காந்த், திண்டுக்கல் லியோனி, காளிவெங்கட்,, ஆனந்த்ராஜ், முரளி சர்மா, பாண்டியராஜன் ஆகியோரும் நடிக்க, வில்லனாக கபீர் துஹான் சிங் நடிக்கிறார். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கும் இந்த படத்திற்கு ‘நெடுநெல் வாடை’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வினோத் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைக்கிறார். பிரம்மிக்க வைக்கும் அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும், குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் பிரம்மாண்டமாக தயாராகிறது ‘ஆலம்பனா’.

#Aalambana #Vaibhav #ParvatiNair #PeterHein #HiphopTamizhaAdhi #KJRStudios #PariKVijay #KoustabhEntertainment #Munishkanth #VinothRathinasamy #SanLokesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;