இன்று மாலை வெளியாகிறது ‘தர்பார்’ டிரைலர்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிக்கும்  ‘தர்பார்’ படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகிறது!

செய்திகள் 16-Dec-2019 11:24 AM IST Top 10 கருத்துக்கள்

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் சுனில்ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமையா, பிரதிக் பாபர், நவாப் ஷா உட்பட பலர் நடித்துள்ளனர். ‘தர்பார்’ பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை இன்று மாலை 6.30 மணிக்கு வெளிட இருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸும், ரஜினியும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் கவனித்துள்ளார், ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘தர்பார்’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Darbar #LycaProductions #Rajinikanth #Nayanthara #YogiBabu #Anirudh #ARMurugadoss

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;