சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இளையராஜா!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்திற்காக யுவன் இசையில் பாடல் பாடிய இளையராஜா!

செய்திகள் 17-Dec-2019 12:35 PM IST Top 10 கருத்துக்கள்

‘இரும்புத்திரை’ படத்தை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள படம் ‘ஹீரோ’. சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்சன் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையில், பா.விஜய் எழுதிய ஒரு பாடலை இளையராஜா பாடியுள்ளார். இந்த தகவலை பாடலாசிரியர் பா.விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்காக இளையராஜா பாடலை பாடுவது இதுவே முதல் முறையாகும். கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள ‘ஹீரோ’ படத்தில் அர்ஜுன் பாலிவுட் நடிகர் அபய் தியோல் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ‘கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ‘ஹீரோ’ கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வருகிற 20-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.

#PSMithran #IrumbuThirai #Hero #SivaKarthikeyan #KJRStudios #KalyaniPriyadarshan #Arjun #AbhayDeol #HeroFromDec20th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;