‘காளிதாஸ்’ - மேடையில் கண் கலங்கிய பரத்!

‘காளிதாஸ்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் கண்கலங்கிய பரத்!

செய்திகள் 18-Dec-2019 3:02 PM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘காளிதாஸ்’. பத்திரிகையாளர்களின் நல்ல விமர்சனங்களுடன் ‘காளிதாஸ்’ வெற்றிப் படமாக அமைய, இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் படத்தில் கதாநாயகனாக நடித்த பரத் பேசும்போது,

‘‘இந்த படம் வெற்றி பெற்றதும் என்னை ‘வெற்றி நாயகன்’ என கூறுகிறார்கள். இந்த வார்த்தையை கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. இதற்கு முன்பும் நான் பல வெற்றிகளை கொடுத்திருக்கிறேன். நடிக்க வந்து பதினெட்டு ஆண்டுகளான நிலையில் பல வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எல்லோரும் படம் ஓட வேண்டும் என்றுதான் உழைக்கிறாகள். ஆனால் சில சமயம் அந்த உழைப்புக்கு போதுமான பலன் கிடைப்பதில்லை. இருந்தாலும் தொடர்ந்து போராடுகிறோம். அப்படியான போராட்டத்தில் இப்போது ‘காளிதாஸ்’ படம் மூலம் ஒரு வெற்றி கிடைத்துள்ளது. அது மிகவும் சந்தோஷத்தை தந்துள்ளது.

நான் நடிக்கும் ஒவ்வொரு படம் வியாபாரத்துக்கு வரும்போது, விநியோகஸ்தர்கள், அந்த தம்பி நடித்த படமா, அவர் நன்றாக நடிப்பார், நன்றாக டான்ஸ் ஆடுவார்! நிறைய வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால் இப்போது அவருக்கு மார்க்கெட் இல்லையே, இப்போது எப்படி அவர் நடித்த படத்தை வாங்குவது? இப்படி நானே என் படங்களை வாங்கி விநியோகம் செய்யுங்கள் என்று எனக்கு தெரிந்த பல விநியோகஸ்தர்களிடம் பேசியிருக்கிறேன். அவர்கள் பார்க்கிறோம் என்பார்கள்! ஆனால் வரமட்டார்கள். இதுதான் சக்சஸ் கொடுக்காத ஒவ்வொரு நடிகரின் நிலைமை!

இப்போது ‘காளிதாஸ்’ படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் தான். நல்ல படத்தை கொடுத்தால் நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கொண்டாடி விடுகிறீர்கள். அதனால் படம் வெற்றி பெறுகிறது. ‘காளிதாஸ்’ படமும் அப்படி வெற்றிபெற்ற படமாகும். இதற்காக உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்’’ என்று கூறிய பரத், மேடையின் நடுப்பகுதிக்கு வந்து அவையை நோக்கி தலை குனிந்து வணங்கினார். அப்போது அவரது கண்கள் கலங்கவும் செய்தது!

இந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் படத்தின் இயக்குனர் ஸ்ரீசெந்தில், தயாரிப்பாளர்கள் மணி தினகரன், சிவநேசன், படத்தை வாங்கி வெளியிட்ட சக்திவேல் பெரியசாமி, அபிஷேக், ராம்குமார், படத்தில் நடித்த ஜெயவேல், ஆதவ் கண்ணதாசன், தங்கதுரை அம்மு ராமச்சந்திரன், படத்தொகுப்பாளர் புவன் சீனிவாசன், ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா ஆகியோரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள்.

#Bharath #AnnSheetal #SriSenthil #VishalChandrasekhar #SureshBala #BhuvanSrinivasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;