‘அக்கா’ என்ற உறவு எவ்வளவு பலமானது என்பதை ‘தம்பி’ பேசும்! – கார்த்தி!

கார்த்தி ஜோதிகா இணைந்து நடித்துள்ள தம்பி படம் குறித்த உரையாடல்…

கட்டுரை 19-Dec-2019 3:44 PM IST Top 10 கருத்துக்கள்

இந்த வார ரிலீசாக நாளை (20-12-19) கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், சவுக்கார் ஜானகி ஆகியோர் நடிக்க, ஜித்து ஜோசஃப் இயக்கியுள்ள ‘தம்பி’, ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்சன் நடிக்கும் ‘ஹீரோ’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்த படங்களுடன் பாஸ்கர் சீனுவாசன் எழுதி இயக்கி நடித்துள்ள ‘கைலா’, பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க, ஹிந்தியில் உருவான ‘தபாங்-3’ படத்தின் தமிழ் பதிப்பு ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்த படங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ இரும்புத்திரை வெற்றிப் படத்திற்கு பிறகு மித்ரன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ஒருவித எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதைப்போல கார்த்தி, ஜோதிகா முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம், ரசிகர்களிடத்தில் மிகப் பெரிய வரவேற்பு பெற்ற படங்களான ‘திருசியம்’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து ஜோசஃப் இயக்கியுள்ள படம், ஜோதிகாவின் தம்பி சூரஜ் தயாரித்துள்ள படம் என்ற சிறப்புகளுடன் வெளியாகும் ‘தம்பி’ படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
இந்நிலையில் ‘தம்பி’ பட இயக்குனர் ஜித்து ஜோசஃப், கார்த்தி, ஜோதிகா, நிகிலா விமல் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்திக்க, தம்பி படம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் விவரம் வருமாறு…

இயக்குனர் ஜித்து ஜோசஃபிடம் கேட்ட கேளவி - சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து நடிப்பாங்கனு எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்கும் நிலையில் கார்த்தி, ஜோதிகா இருவரையும் சேர்ந்து நடிக்க வைத்தது ஏன்?
ஜித்து ஜோசப் : இவங்க ரெண்டு பேரையும் நான் செலக்ட் பண்ணல. இந்த படத்துக்காக எங்கிட்ட வந்தப்போ இவங்க ரெண்டு பேரும் இணைந்து நடிப்பது உறுதியாகியிருந்தது. அதே நேரம் இந்த காம்பினேஷன் எனக்கும் பிடிச்சிருந்தது. அதுக்கு அப்புறமா மற்ற நடிகர்கள நான்தான் செலக்ட் பண்ணினேன்.

‘தம்பி’ உங்களுடைய சொந்த கதையா?
ஜீத்து ஜோசஃப் : இல்லை! பாலிவுட் எழுத்தாளர் ரென்ஷில் டி சில்வா, சமீர் அரோரா ரெண்டு பேரும் எழுதிய கதை. அந்த கதையை நான் கொஞ்சம் மாத்தி வேலை பார்த்திருக்கேன். அவங்க ஹிந்தி, நான் மலையாளம். அதனால தமிழ்ல சரியா இருக்கணும்கிறதுக்காக ‘விக்ரம் வேதா’ எழுத்தாளர் மணிகண்டனை இதுல வேலை பார்க்க வைத்தோம். இந்த கதையில் நான்கைந்து பேர் வேலை பார்த்திருக்காங்க!

‘தம்பி’யின் கதை பத்தி சொல்ல முடியுமா?
ஜீத்து ஜோசஃப்: இது ஒரு ஃபேமிலி படம். அதில் ரில்லர் இருக்கு. ரெண்டு ஃபேமிலி அவங்களுக்குள்ள நடக்கிற சம்பவங்கள், அதில் ஒரு
த்ரில்லர் விஷயம் இருக்கும். இதுக்கு மேல சொல்ல முடியாது!


கார்த்தியிடம் கேட்ட கேள்வி - இதுல வேற வேற லுக்ல வர்றீங்களே, எத்தனை கேரக்டர் உங்களுக்கு ?
கார்த்தி : மல்டிபிள் லுக் கிடையாது . ரெண்டு லுக் தான். கதை கோவாவுல ஆரம்பிச்சு பயணிக்குது. அதனால ரெண்டு லுக். ஒரே கேரக்டர் தான். நான் நிறைய கெட்-அப் முயற்சி பண்ணினதில்லை. ஜித்து ஜோசஃப் சார் தைரியம் சொல்லி கோவா லுக் பண்ண வச்சார். உங்கள சும்மாவே பாக்குறாங்க, வேற லுக்லயும் பாப்பாங்கனு கன்வின்ஸ் பண்ணாரு. நான் ஒரு லுக்ல சுத்திட்டு இருக்கேன் இல்லையா? அந்த லுக்ல கோவால நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க. ஜித்து ஜோசஃப் சார் பைக்ல கூட்டிப்போய் பாருங்க எவ்வளவு பேர் உங்கள மாதிரி சுத்திட்டு இருக்காங்கனு காட்டினார். கோவா பகுதிக்கு மட்டும் அந்த கெட்-அப்பை முயற்சி பண்ணியிருக்கோம்!ஜோதிகாவிடம் கேட்ட கேள்வி - உங்க தம்பி தயாரித்திருக்கிற படம்! கார்த்தி தம்பி கூட நடித்திருக்கீங்க! எப்படி இருந்தது?
ஜோதிகா: இது எதிர்பார்க்கவே இல்ல. எப்படி நடந்ததுனு இப்பவும் ஆச்சர்யாமா இருக்கு. அதுவும் ‘தம்பி’ன்னு டைட்டில் அமைஞ்சது எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கார்த்தி கூட நடிக்கிறது கஷ்டமா ? இல்ல சூர்யா கூட நடிக்கிறது கஷ்டமா ?
ஜோதிகா : சூர்யா கூட தான்! அவர் கூட நடிக்கிறது கஷ்டம்.. நிறைய சண்டை வரும்.

எப்படியான சண்டை?
ஜோதிகா: உங்க வீட்ல எப்படி சண்டை வருமோ.. அப்படித்தான் புருஷன் பொண்டாட்டி சண்டை!


ஜித்து ஜோசஃபிடம் கேட்ட கேள்வி - தமிழ் சினிமாவுல நிறைய அக்கா தம்பி கதை வந்துருக்கு! இதிலென்ன ஸ்பெஷல் ?
ஜித்து ஜோசஃப்: அதை நீங்க தியேட்டர்ல தான் பார்த்து தெரிஞ்சுக்கணும். இதுல எல்லா கேரக்டருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஒரு நோக்கம் இருக்கும்.


கார்த்தி : இதுல கண்டிப்பா ஒரு ஸ்பெஷல் இருக்கு! ஆனா அதை நீங்க தியேட்டர்லதான் பார்க்கணும்!


ஜோதிகா : இப்படத்துல நிறைய ஒரிஜினாலிட்டி இருக்கும்.


கேள்வி - நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கும்போது எது கஷ்டமா இருந்தது ?
கார்த்தி : கஷ்டமெல்லாம் தோணவே இல்ல. நாங்க எப்பவும் எப்படி இருப்போமோ அப்படிதான் இருந்தது. நான் என்ன ரசிச்சேன்னா படத்துல எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. சண்டை போட்டுகிட்டே இருப்போம்! அவங்க முறைப்பாங்க, அப்போது நான் ஒதுங்கி போவேன் அதை ரசிச்சேன்.

வீட்லயும் அப்படித்தானா ?
கார்த்தி : ம்ம் வீட்லயும் நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசிப்போம்!
ஜோதிகா : இல்ல வீட்ல நாங்க சண்டைலாம் போட்டுக்க மாட்டோம்!

தமிழ் சினிமாவுல ஜோதிகாவ பொம்பள கமல்னு சொல்லுவாங்க இதுல எப்படி நடிச்சிருக்கீங்க ?
ஜோதிகா : அப்படில்லாம் ஒண்ணும் கிடையாது! அப்படி யாரும் சொல்ல மாட்டாங்க. என்ன பொறுத்தவரைக்கும் லேடி கமல்னா ஒரே ஆள் ஊர்வசி மேடம் மட்டும்தான்.

ஜித்து ஜோசஃப் : ஒண்ணு சொல்லணும். இவங்க நடிப்பு பிரமாதம். ஒரு கேரக்டருக்கு இவங்க எடுத்துக்குற உழைப்பு, சிரத்தை, ஒரு சீனுக்கு முன்னாடி அவங்க தன்னை தயார்படுத்திக்கிறது எல்லாமே பக்கா புரொஃபஷனல்.
ஜோதிகா : நன்றி சார்

கேள்வி - ‘தம்பி’னு ஏற்கனவே ஒரு படம் வந்துருக்கு, அப்புறம் ஏன் மீண்டும் அதே டைட்டில் ?
ஜித்து ஜோசஃப் : நிறைய டைட்டில் தேர்ந்தெடுத்தோம் ஆனா இந்தக் கதைக்கு இது தான் சரியா இருந்தது.

கார்த்தியிடம் கேட்ட கேள்வி - ஜித்து ஜோசஃப் படத்துல நடிக்கிறதுக்கான ஸ்கோப் அதிகமா இருக்கும். இதுல எப்படி இருந்தது?
கார்த்தி : என்னை பொறுத்தவரைக்கும் சார் சுதந்திரமா விட்டுடுவாரு. அவங்கங்க பெஸ்ட் எதுவோ அத பண்ண விடுவாரு. அதே நேரம் சீனுக்கு என்ன வேணுமோ அத எடுத்துடுவாரு!

ஜோதிகா : எனக்கு பிடிச்ச விஷயம்.. சார் எல்லாத்துக்கும் லாஜிக் பார்ப்பாரு. ஒரு சீன் அந்த லாஜிக்கோட இருக்கா ஆடியன்ஸ் பாயிண்ட்ல எப்படி எடுத்துப்பாங்கனு பார்ப்பாரு. இப்ப யாரும் அதப் பாக்கிறதில்ல. அது எனக்குப் பிடிக்கும்.

நிகிலா விமல்: டைரக்டர் எப்பவும் பர்ஃபெக்ட்! 99- க்கும் போக விட மாட்டார் 101-க்கும் போக விட மாட்டார். சரியா 100-ல அவருக்கு தேவையானத வாங்கிடுவார்.

ஒரே படத்தில் சிவக்குமார், ஜோதிகா, கார்த்தி, சூர்யா நடிக்கிற வாய்ப்புகள் இருக்கா?
ஜித்து ஜோசஃப்: நல்ல ஐடியா, கொஞ்சம் டைம் கொடுங்க! கதை ரெடி பண்ணிட்டு வந்துடுறேன் .


ஜோதிகாவிடம் கேட்ட கேள்வி - உங்க லுக் இந்த படத்தில எப்படி வந்திருக்கு ?
ஜோதிகா : நான் இந்த படத்தில கார்த்தியை விட யங்கா தெரியணும்னு பண்ணியிருக்கேன். படத்தை பாத்துட்டு சொல்லுங்க!

கார்த்தி : ஒளிப்பதிவாளர் R D ராஜசேகர் சார் அண்ணியோட ஃபேவரைட் கேமராமேன்! அவர் பண்ணின படங்கள்ல அண்ணி ரொம்ப அழகா தெரிவாங்க! படமும் பெரிய ஹிட்! எனக்கெல்லாம் குளோசப் ஷாட் ஒரு நிமிஷத்துல முடிஞ்சுடும். ஆனா அண்ணிக்கு அரை மணி நேரம் எடுப்பார். எனக்கெல்லாம் இந்த மாதிரி பண்ணவே இல்லையேனு சொல்லுவேன்.


நிகிலா, இவங்க ரெண்டு பேர் நடிக்கிற படம் எப்படி ஒத்துக்கிட்டீங்க ?
நிகிலா விமல்: இந்த டீமே ரொம்ப பெரிசு, பெரிய பெரிய டெக்னீஷியன்கள், இவங்க ரெண்டு பேரும் நடிக்கிறாங்க! இப்படி ஒரு படத்த யார் வேணாம்னு சொல்வாங்க! ஆனா எனக்கு முதல்ல பயமா இருந்தது. தமிழில் எனக்கு ரீ-என்ட்ரி மாதிரி நம்ம கேரக்டருக்கு ஒன்னுமே இருக்காதோனு நினைச்சேன்! ஆனா என் கேரக்டரு நல்லா இருந்தது! அதனால ஒத்துக்கிட்டேன் கார்த்திக்கான கேள்வி - சூர்யா எதுவும் டிப்ஸ் கொடுத்தாரா அண்ணி கூட நடிக்க? கார்த்தி : அப்படில்லாம் எதுவும் கொடுக்கல. அண்ணா ஒரு நாள் மட்டும் ஷூட்டிங் வந்தார். நிறைய அக்கா, தம்பி கதைகள் வந்துருக்கு! இந்தப் படம் என்ன சொல்ல வருது? கார்த்தி:க்கான்ற உறவு எவ்வளவு பலமானதுனு என்பதை இந்தப் படம் பேசும்.

#Thambi #Donga #Karthi #Jyotika #Sathyaraj #JeethuJoseph #NikhilaVimal #ThambiAudioLaunch #ThambiFromDecember20th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;