‘சைக்கோ’வின் ரிலீஸ் தேதி மாற்றம்!

இம்மாதம் 27-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சைக்கோ  ஜனவரி 24-ஆம் தேதி அன்றே வெளியாகும்!

செய்திகள் 21-Dec-2019 6:18 PM IST Top 10 கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதிராவ், இயக்குனர் ராம் ஆகியோர் நடிக்கும் படம் ‘சைக்கோ’. இளையராஜா இசை அமைக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தை இம்மாதம் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் இப்படம் இந்த மாதம் வெளியாகவில்லை. தற்போது இப்படத்தை அடுத்த மாதம் (ஜனவரி) 24-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘Double Meaning Productions’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை தொடர்ந்து மிஷ்கின் ‘துப்பறிவாளன்-2’ படத்தை இயக்கி வருகிறார்.#Psycho #Mysskin #DirectorRam #NithyaMenen #AditiRaoHydari #UdhayanidhiStalin #PCSreeram #Ilaiyaraaja #CinematographerTanveerMir

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;