செய்தியாளராகும் யாஷிகா ஆனந்த்!

ஆரவ் நடிக்கும் ‘ராஜபீமா’ படத்தில் செய்தியாளராக நடிக்கிறார் யாஷிகா ஆனந்த்!

செய்திகள் 26-Dec-2019 1:21 PM IST Top 10 கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தை தொடர்ந்து ஆரவ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘ராஜபீமா’. அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கும் இப்படத்தின் அனத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் இப்படத்தில் ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, ஒரு சிறப்பு வேடத்தில் ஓவியா நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, நாசர், சாயாஜி ஷிண்டே ஆகியோரும் நடிக்கும் இப்படத்தில் யாஷிகா ஆனந்தும் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் செய்தியாளரக நடிக்கிறார் என்றும் அவரது கேரக்டர் கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் கேரக்டராகவும் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தை தயாரித்த ‘சுரபி ஃபிலிம்ஸ்’ எஸ்.மோகனே இப்படத்தையும் தயாரிக்க, சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கும் பாடல்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;