இளையராஜாவுக்கு கேரள அரசு விருது!

இளையராஜாவுக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது வழங்கப்பட இருக்கிறது!

செய்திகள் 27-Dec-2019 11:36 AM IST Top 10 கருத்துக்கள்

இசைத்துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளவர் இளையராஜா. இவருக்கு ஏற்கெனவே பல்வேறு விருதுகள் கிடைத்துள்ள நிலையில் கேரள அரசு ஆண்டு தோறும் வழங்கி வரும் ஹரிவராசனம் விருதும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அறிவிப்பை கேரள அரசு நேற்று வெளியிட்டுள்ளது. . சபரிமலை சன்னிதானத்தில் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி நடக்கும் விழாவில் இவ்விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து அங்கு இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதற்கு முன் இந்த விருது இசைத்துறையை சேர்ந்த பிரபல பாடகர்களான கே.ஜே.யேசுதாஸ், கே.எஸ்.சித்ரா, பி.சுசீலா, எம்.ஜி.ஸ்ரீகுமார் உட்பட பலர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#HarivarasanamAward #GovernmentOfKerala #Ilaiyaraaja #KeralaState #Award #Maestro #Isaignani

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;