8 நாட்களில் 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம்!

பாபு கணேஷ் இயக்கத்தில் 8 நாட்களில் 48 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட படம்  ‘370’

செய்திகள் 27-Dec-2019 1:05 PM IST Top 10 கருத்துக்கள்

‘கடல்புறா’, ‘நாகலிங்கம்’, ‘தேசிய பறவை’, ‘நடிகை’ உட்பட பல படங்களை இயக்கியிருப்பவர் பாபு கணேஷ். பல்வேறு படங்களில் நடிக்கவும் செய்துள்ள இவர் பல்வேறு சாதனை முயற்சிகளையும் மேற்கொண்டு திரை உலகில் பிரபலம் அடைந்தவர். இவர் இப்போது கின்னஸ் சாதனை முயற்சியாக 8 நாட்களில் 48 மணி நேரத்தில் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். ‘370’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பாபு கணேஷின் மகன் ரிஷிகாந்த் கதாநாகனாக நடித்துள்ளார். இவருடன் மெகாலி, ‘மிஸ் வேர்ல்ட்’ புகழ் நமிதா (திருநங்கை) ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், ரிஷா, ‘பெசன்ட் நகர்’ ரவி, கராத்தே கோபால், ராஜ்கமல், வெற்றி, போகி பாபு, சிவன் ஸ்ரீனிவாசா, ரோஜா ஆகியோரும் நடித்துள்ளனர்.

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரிஷிகாந்த் இராணுவ கமாண்டோவாக நடிக்க, வில்லன்களாக பெசண்ட் நகர் ரவி, ராஜ்கமல் ஆகியோர் நடித்துள்ளனர். 8 நாட்களில் ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் படப்பிடிப்பு நடத்தி மொத்தம் 48 மணிநேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, பாடல்கள், இசை, சவுண்ட் எஃபெக்ட்ஸ் என்று படத்தின் 14 கிராஃப்ட்களை பாபு கணேஷே கவனித்துள்ளார். இந்த படம் தேசபற்றை வலியுறுத்தும் கதை அமைப்பு கொண்ட படம் என்று நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாபு கணேஷ் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டபக்குனு பாடல் வீடியோ - மான்ஸ்டர்


;