மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் மற்றும் இயக்குனர் கௌரவ் ஆகியோர் நடிக்கிறார்கள் என்ற தகவலை சில நாட்களுக்கு முன் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் நடிக்கிறார் என்ற தகவல் படக்குழுவினரிடமிருந்து கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்கும் மனு ஆனந்த் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்தான் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஷ்வத் இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை அருள் வின்செண்ட் கவனிக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தின் ஷுட்டிங்கில் இன்று கலந்துகொண்டு நடித்து வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன்!
#VishnuVishal #FIR #FaizalIbrahimRaiz #ManuAnand #ManjimaMohan #SujataaEntertainments #ManjimaMohan #RaizaWilson #RebaMonicaJohn #ArulVincent #PrasannaGK #Ashwath #PoorthiPravin #GauravNarayanan #GVMInFIR #GauthamVasudevMenon
ஆதிக் ரவிச்சந்திரனும், பிரபு தேவாவும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ...
இந்திய கிரிக்கெட் வீரர்களில் பிரபலமான ஒருவர் ஹர்பஜன் சிங். தனது விளையாட்டு திறமையால் இந்தியா முழுக்க...
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம்...