விதார்த் நடிப்பில் மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படம்!

விதார்த் நடிக்கும் மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படம் ‘நட்சத்ரா’

செய்திகள் 27-Dec-2019 4:29 PM IST Top 10 கருத்துக்கள்

மனோஜ் ராம் இயக்கத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நட்சத்ரா’. இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக ;நெடுநல் வாடை’ படத்தில் கதையின் நாயகியாக நடித்த அஞ்சலி நாயர் நடிக்கிறார். மற்றும் சந்தோஷ் பிரதாப், செண்ட்ராயன், சங்கிலி முருகன், ‘ஆடுகளம்’ நரேன், லக்‌ஷ்மி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை ‘Preniss International’ நிறுவனம் சார்பில் பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு பரத் ராகவன் இசை அமைக்க, N.S.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிகுமரன் படத்தொகுப்பு செயது வருகிறார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றிருப்பதாக படக்குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர். இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படம் குறித்து இயக்குனர் மனோஜ் ராம் கூறும்போது, ‘மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘நட்சத்ரா’வின் இசை மற்றும் டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது’’ என்றார்.

#ManojRam #PremnathChidambaram #VellaySethu #PrenissInternational #Vidharth #NedunaalVaadaiAnjaliNair #BarathRaghavan #NSUthayaKumar #ManiKumaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;