விஜய்யின் புத்தாண்டு ட்ரீட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய்-64’-ன் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது!

செய்திகள் 30-Dec-2019 12:35 PM IST VRC கருத்துக்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கும் படம் ‘விஜய்-64’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பிறகு டெல்லியில் சில நாட்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் ஷிமோகாவிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படம் துவங்கியதிலிருந்து படு விறுவிறுப்பாக படப்பிடிப்பு வேலைகள் நடந்து வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நாளை (31-12-19) மாலை 5 வெளியிட இருக்கிறார்கள். இது குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் ‘விஜய்-64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் ரசிகர்களுக்கு விஜய்யின் புத்தாண்டு ட்ரீட்டாக அமையவிருக்கிறது.

இந்த படத்தை ‘XB FILM CREATORS’ என்ற நிறுவனம் சார்பில் சேவியர் பிரட்டோ தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஃபிலோமின் ராஜ் கவனிக்கிறார்.சண்டை காட்சிகளை ‘ஸ்டண்ட்’ சில்வா அமைக்க, கலை இயக்கத்தை சதீஷ் குமார் கவனிக்கிறார்.

#Thalapathy64 #Vijay #Anirudh #LokeshKanagaraj #SathyanSooryan #PhilominRaj #SatheeshKumar #StuntSilva #VijaySethupathi #AntonyVarghesePepe #MalavikaMohanan #AndreaJeremiah #ArjunDas #Thalapathy64FirstLook #Thalapathy64FirstLookOnDec31stAt5PM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;