எஸ்.ஜே.சூர்யா படத்தில் இணைந்த தனுஷ்!

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியாபவானி சங்கர் இனைந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனுஷ் வெளியிடுகிறார்!

செய்திகள் 30-Dec-2019 1:16 PM IST VRC கருத்துக்கள்

‘மான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும், இப்படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியா பவானி சங்கரே கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் தகவலை ஏற்கெனவே பதிவு செய்திருந்தோம். ‘ஏஞ்சல்ஸ் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.ஜே.சூர்யாவே தயாரிக்கும் இப்படத்திற்கு ‘பொம்மை’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்ற அதிகாரபூர்வமற்ற தகவலையும் சமீபத்தில் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப்போவது யாராக இருக்கும்? என்று ரசிகர்களை கணிக்க சொல்லி ட்வீட் செய்திருந்தார். இதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா தனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட போகிறவர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் தனுஷ் நாளை (31-12-19) காலை 11 மணிக்கு தனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கலை இயக்கத்தை கதிர் கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தை 2020 ஃபிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நாளை மாலை 5 மணிக்கு ‘தளபதி-64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ராதா மோகன், எஸ்.ஜே.சூர்யா முதன் முதலாக கூட்டணி அமைத்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

#SJSuryah #AngelStudiosMHLLP #YuvanShankarRaja #RadhaMohan #RichardMNathan #Kadhirr #PriyaBhavaniShankar #SJSuryahFilmFromFebruary14th2020 #ChandiniTamilarasan #SJSuryahFilmFirstLookFromTomorrow

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மான்ஸ்டர் - டீஸர்


;